2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யசூசி அகாஷி ஞாயிறன்று வருகிறார்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி' இலங்கைக்கு விஜயம் செய்விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும்  8 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரும் அவர்  13 ஆம் திகதி வரையிலும் இங்கு தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சபைக்கான தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் யசூசி அகாஷி முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதனால் அவருடைய விஜயம் முக்கியமானதாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் வடக்கிற்கு விஜயம் செய்வது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

யசூசி அகாஷி இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவராக 2002 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதன் பின்னர் 23 ஆவது தடவையாக இலங்கைக்கு விஜயம்செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--