2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நீதவானை திட்டிய கான்ஸ்டபிளுக்கு பிணை

Kanagaraj   / 2014 மார்ச் 31 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவை திட்டடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த மஹரகம பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த கான்ஸ்டபிள் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கங்கொடவில நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட முன்நகர்வு மனுவை ஆராய்ந்த பின்னரே அவருக்கு நீதவான் அருண அளுத்கேயினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடமைநிமித்தம் பமுனுவவிற்கு புதன்கிழமை(26) சென்றுகொண்டிருந்தபோது தனது வாகனத்தை நிறுத்தி மிகவும் கீழ்தரமான முறையில் நடந்துகொண்டதாக அந்த பொலிஸார் கான்ஸ்டபிளுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் மற்றும் நீதவான் சங்கங்களிடம் முறையிடடிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .