2021 மார்ச் 04, வியாழக்கிழமை

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கும்: பிரிட்டன்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உட்பட அனைத்து சர்வதேச தரப்பினருடன் இணைந்து செயலாற்ற பிரித்தானியா முடிவு செய்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.  

இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக்கொள்ளும் என்று நாம் நம்புகின்றோம். அத்துடன், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற சர்வதேச சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி அதன் பலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்துள்ளோம் என வில்லியம் ஹேக் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .