2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

இலங்கை ஒத்துழைக்க வேண்டும்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள   பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கிமூன் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் அதேவேளை அதற்கான தீர்வுகளை வலியுறுத்துவதை இத்தீரமானம் கோடிட்டு காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானத்தை வரவேற்றுள்ள அவர், இது இலங்கையின் நம்பகத்தன்மை மற்றும் நிரந்தர சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஊக்குவிப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2009 ஆண்டு இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளையும் அவர் நினைவுகூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .