2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இலங்கை அணிக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி சிறப்பாக விளையாடியதுடன் தனது இலக்கினை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட அமிதாப் பச்சன், இந்தியா தோற்றது கவலையான விடயம் தான். எனினும் உலகின் ஏனைய அணிகளை விட சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தெரிவான எமது வீரர்கள் சிறந்தவர்கள்.

எம்மை வெற்றிகொண்ட இலங்கை அணியும் சிறந்த அணிதான். அதில் எமக்கு சந்தோஷமே. வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா என அவர் குறிப்பிட்டுள்ளார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .