2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

புலிகளின் அரசியல் பிரிவுக்கு தடையில்லை: கம்மன்பில

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத அமைப்பொன்றை இல்லாதொழித்த பின்னர் அவ்வமைப்பின் அரசியல் பிரிவுக்கு தடைவிதிக்கவில்லை. அவ்வாறு தடை விதிக்காத ஒரே நாடு இலங்கையாகும். என்று தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை அமைச்சருமான உதய கம்மன்பில, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டாயம் தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பயங்கரவாத அமைப்பொன்றை இல்லாதொழித்த பின்னர், அவ்வமைப்பின் அரசியல் பிரிவுக்கு தடை விதிக்காத ஒரே நாடு இலங்கையாகும்.

அதனாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களுடைய மனைவிமார் இன்று மக்கள் பிரதிநிதிகளாக உருவாகும் அசாதாரண நிஇஷமை ஏற்பட்டுள்ளது என்றும் கம்மன்பிஷ தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தென்னாபிரிக்காவுக்கு புதன்கிழமை (9) பயணமாகினர்.

கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசுடனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ணின்வந்திருந்தார்.

இதன் விளைவாக அரச தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்கா சென்று திரும்பியிருந்தது. மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மாநாட்டின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தென்னாபிரிக்கா சென்று பேச்சு நடத்துவது என்று முப்ன்கூட்டியே முடிவாகியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தென்னாபிரிக்கா செல்கின்றமையானது ஜெனீவா பிரேரணையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சர்வதேச விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது.

சர்வதேச விசாரணைக்கும் இந்த விஜயத்திற்கும் இடையே எந்தவிதமான சம்பந்தணிம் இல்இஷயென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தன், தென்னாபிரிக்காவுக்கான விஜயத்திற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் ஆகியவை தொடர்பில் சகல விதமான விடயங்கள் பற்றி இந்த விஜயத்தின் போது பேச்சு நடத்தப்படும் என்று சம்பந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X