2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு; இலங்கைக்கு நான்காம் இடம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் வொஷ்டோக் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையிலேயே இலங்கைக்கு நான்காம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அண்மைக் காலப்பகுதியில் சிரியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கடத்தல், ஊடகவியலாளர் படுகொலைகள், சித்திரவதைகள் அதிகரித்துக் காணப்படுவதால் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிரியா பிரதான இடத்தை வகிப்பதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இயங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பு பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஈராக்கிலேயே அதிகளவிலாள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதால் இந்த பட்டியலில் ஈராக் முதலிடத்தை வகிக்கின்றனது.

இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஈராக்,  சோமாலியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ, கொலம்பியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரேசில், நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகள் 13 இடங்களைப் பிடித்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .