2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பிரித்தானிய பிரஜையை நாடுகடத்த உத்தரவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

தாமரைமலரில் புத்தபெருமான் இருப்பதை போன்ற உருவத்தை தனது இடது கையில் பச்சை குத்திக்கொண்டு மும்பாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நேற்று மாலை பிரவேசிக்க முயன்ற பிரித்தானியாவைச்சேர்ந்த பெண் பிரஜையை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். அவரை நீர்கொழும்பு நீதவானின் உத்தரவின் பிரகாரம் நாடுகடத்துவதற்காக மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த நம்மி திமினி கோல்மன் என்ற பெண்ணேயை நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஜி. எம். திலக்க பண்டார, அவரது தாய் நாட்டுக்கு திருப்பியனுப்புமாறு உத்தரவிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பாயிலிருந்து ஜி.எம்;. 256  இலக்க விமானத்திலேயே கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.

பிரதிவாதி குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறவில்லை எனவும், மதத்தை அவமதிக்கும் நோக்கம் இல்லை எனவும், ஆயினும், இவர் இலங்கையில் தங்கியிருந்தால் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு என பொலிஸார்  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .