2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதியின் மனு நிராகரிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அகதியொருவரினால் சமர்ப்பிக்கபட்ட மனுவினை மதுரை மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நிராகரித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கான 1946ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் தனது மகனை விடுதலை செய்துகொள்வதற்காகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பி.கருப்பதேவர் என்ற இலங்கை அகதியே இவ்வாறு குடியுரிமை பெறுவதற்கான மனுவினை சமர்ப்பித்துள்ளார்.

இவரது மகன், கடந்த 2012ஆம் ஆண்டில் திருப்பூரில் கடமையாற்றும் போது நபரொருவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி இலட்சம் ரூபாவினை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என்பதற்கான சான்றுகளை மதுரை மேல் நீதிமன்ற நீதிபதிகளான எ.செல்வம் மற்றும் வி.எஸ்.ரவி ஆகியொர் முன்னிலையில் மனுதாரரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான கருப்பதேவர், தான் முன்னாள் இந்திய குடிமகனாக இருந்ததாகவும் 1974ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய கடவுச்சீட்டுடன் யாழ்பாணத்தில் குடியேறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளுடனான இலங்கைப் படையினரின் யுத்தம் காரணமாக 1996ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தனது மகனுடன் அகதிகளாக இடம்பெயர்ந்ததாகவும் அவ்வாறு இடம்பெயரும் போது தனது இந்திய கடவுச்சீட்டினை எடுத்து வரவில்லையெனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அகதிமுகாமிலிருந்து அவரை விடுவிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 1946ஆம் ஆண்டு வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தை நீதிமன்றத்தினால் பிரயோகிக்க முடியாது என்றும் கூறியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--