2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கான ஆதரவு தொடரும்: சீனா

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் இலங்கைக்கு ஆதரவளிக்க தாம் எப்போதும் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியூ ஷென்மினுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கைக்கு சீனா ஆதவாகச் செயற்பட்டமை தொடர்பில் சீன பிரதியமைச்சரிடம் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சீன பிரதியமைச்சர், இலங்கையில் முதலீடு, பொருளாதார மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் சீனா காட்டிவரும் அக்கரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.


  Comments - 0

  • Velu Pirabu Friday, 25 April 2014 04:29 PM

    நாங்கள் எப்பொழுதும் உங்களுக்கு பக்கபலமாய் இருப்போம். - யூ என் னில் சீனா இருக்கிறது !!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--