2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இரு பிரேரணைகளும் நிறைவேற்றம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயல்நுணுக்க அபிவிருத்தித் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரிப்பதற்கான இரண்டு பிரேரணை களும் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டன.

விஷேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இந்த இரண்டு பிரேரணைகள் மீதான விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் அதனை அங்கீகரிப்பதற்கு சபையின் அனுமதி கோரப்பட்டது.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பதில் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான ஜோன் அமரதுங்க, இந்த பிரேரணை மீது பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கோரிநின்றார்.

முதலாவது பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்பிரகாரம் முதலாவது பிரேரணை 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாவது பிரேரணைக்கு ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்பிரகாரம் முதலாவது பிரேரணை 65 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .