2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

எலும்புக்கூட்டிற்கு அருகில் வெடிப்பொருட்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்.முகமாலைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (03) காலை மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுக்கு அருகில் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

2 கைக்குண்டுகள், 3 மகசின்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இவைதவிர விடுதலைப்புலிகளின் சீருடை, பெண்களின்; உள்ளாடைகள், ஒரு கட்டு சொப்பிங் பை, ஷெம்போ மற்றும் பற்தூரிகை ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி இடத்தில் மேலும் பல எலும்புக்கூடுகள் இருக்கலாம் எனச் சந்தேகிப்பதுடன், நீதவான் வருகை தந்து பார்வையிட்ட பின்னர், நீதவானின் அனுமதி பெற்று தேடுதல் இடம்பெறும் என்றும் பளைப் பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .