2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

புலித்தடை நீக்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உதவ தயார்: இலங்கை

Thipaan   / 2014 ஒக்டோபர் 22 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2011 இல் தாக்கல் செய்யப்பட்ட வழங்கின் தீர்ப்பு தொடர்பில் விடுவிக்கப்பட்ட அறிக்கைகளையிட்டு, ஆச்சரியமடைவதாகக் கூறியுள்ள இலங்கை, இந்தத் தீர்ப்பு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அவர்கள் மேற்கொண்டு எடுக்கவுள்ள நடவடிக்கையில் தொடர்ந்து உதவவுள்ளதாக கூறியது.
 
புலிகள் தம் மீதான தடையை நீக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மன்றம் பிரதிவாதியாக காட்டப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய அறிக்கைகள் பிழையான எடுகோள்களின் அடிப்படையில் அமைந்தவை என வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் பிரதிவாதிக்கும் தலையிட்டார்களுக்கு உதவக்கூடிய விடயங்களை கொடுத்துவந்தது.
 
இவ்வாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மறுப்பதற்காக பொருத்தமான சகல விவரங்களையும் இஷங்கை ஐரோப்பிய ஆணையகத்துக்கு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதியான ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தகால எல்லைக்குள் மேன்முறையீடு செய்ய முடியும்
எதிர்கால நடவடிக்கைகளாக குறித்த கட்சிக்காரர்கள் அதாவது ஐரோப்பிய ஒன்றியம் புதிய கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளை கொண்டுவரலாம், ஐரோப்பிய நீதிமன்றுக்கு மேன்முறையீடு செய்யலாம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

எஞ்சியுள்ள புலிகளினால் தமது பிரஜைகளிமிருந்து பலவந்தமாக பணம் கறப்பதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .