2025 ஜூலை 12, சனிக்கிழமை

கொம்பனி வீதி ஓ.ஐ.சியை மன்றுக்கு அழைக்கவும்: ஐ.தே.க கோரிக்கை

Thipaan   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்பு பயிற்சி பாடசாலையில் சென்றிருந்த போது, என்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் எவரிமிருந்தும் இன்றுவரையிலும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி, நாடாளுமன்றத்தில் நேற்று சுட்டிக்காட்டியது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த தாக்குதலினால் தனக்கும் தன்னுடைய வாகனத்துக்கும் பாரியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

துறைமுக அதிகாரசபை பாதுகாப்பு பாடசாலைக்கு தான் கண்காணிப்பு பயணத்தையே மேற்கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸாரே மேற்கொள்ளவேண்டும்.

அவர்கள், தங்களுடைய கடமையை மீறிவிட்டார். ஆகையால் கொம்பனி வீதி பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரியை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு முன்னிலையில் அழைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .