2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நாளை வருமாறு அழைத்தனர்: குணரட்னம்

Gavitha   / 2015 ஜனவரி 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி சோசலிசக்கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு திரும்பியதன் பின்னர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, வாக்குமூலம் கொடுப்பதற்கு அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு இன்று (28) சென்றிருந்தார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக எனது செயற்பாடுகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள்.

மேலும் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைக்கு நாளை (29) திணைக்களத்துக்கு வருமாறும் தெரிவித்தனர்.

அது மட்டுமன்றி எனது குடியுரிமை பிரச்சினைகள் குறித்தும் விசாரணைகளை நடத்தினார்கள்.

பன்னிப்பிட்டியவிலுள்ள முன்னணி சோசலிச கட்சியின் அலுவலகத்துக்கு குடிவரவு திணைக்கள அதிகாரிகள், குமார் குணரட்ணத்திடம்  வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக திங்கட்கிழமை (26) சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .