2021 மே 10, திங்கட்கிழமை

நிஷா பிஸ்வால், திங்கள் வருகிறார்

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.


இரு நாள் விஜயத்தை மேற்கொண்டே அவர் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.


அவருடன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய துணை உதவி செயலாளர் அதுல் கெஷாப்பும் வருகை தரவிருக்கின்றார்.
புதிய அரசாங்கத்துடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதுடன் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவார்.


சிவில் சமூகத்தினர் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் என்று தெரியவருகின்றது.


தேசிய தேர்தல் ஒன்று நடைபெற்றதன் பின்னர் வெளியுறவுத்துறை உயரதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X