2021 மே 06, வியாழக்கிழமை

20 % வட்டிக்கு பணம் கொடுத்து சூதாட்டம்: பெண்கள் கைது

Kanagaraj   / 2015 ஜனவரி 31 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை, கோணபொல வடக்கு கும்பே எனுமிடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அதில், 20 சதவீதம் வட்டிக்கு பணம் கொடுத்து, பணத்துக்கான வட்டியை அப்போதே அறவிடும் பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


வட்டிக்கு பணம் கொடுக்கும் பெண்களின் வசமிருந்து ரூ.45ஆயிரமும் சூதாட்ட திடலில் இருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அந்த சூதாட்ட மையத்தை பொலிஸார் சுற்றிவளைக்க சென்றபோது. தப்பியோடுவதற்கு முயன்ற இருவர் விழுந்து காயமடைந்துள்ளதாகவும் அவ்விருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .