2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் மீது தாக்குதல்: யுவதி பலி

Kanagaraj   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் மீது கூரிய ஆயுதத்தினால் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்  சந்தேகநபர், ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம், காலி, தடல்ல மஹாமுதலி எனுமிடத்திலிலேயே இடம்பெற்றுள்ளது. 


படுகொலைச்செய்யப்பட்ட மூவரில் ஒருவர் 27 வயதான யுவதியென்று தெரிவிக்கப்படுகின்றது.  அந்த யுவதியின் தாய் மற்றும் சகோதரர் படுகாயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோடறினாலேயே அந்த மூவரும் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும், அயல்வாசியொருவர் ஹிங்தொட எனுமிடத்தில் ரயிலில் பாய்ந்து பலியாகியுள்ளதாகவும் அவருடைய முகம் முழுமையாக சேதமடைந்திருப்பதால் அவரை இனங்கண்டுகொள்வது பெரும் சிரமமாக இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

24 வயதான எஸ்.ஜி சந்மாலி என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். அவரது தாயாரான சி.எம்.சீலவதி (வயது 48) மற்றும் 25 வயதான சகோதரர் எஸ்.ஜி. சமித் ஆகிய இருவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X