Kanagaraj / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுடன் சில நிமிடங்கள் உரையாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என்று திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி தெரிவித்திருந்தார்.
அதில், 13ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு,கிழக்கு அதிகாரங்கள் வழங்குவோம், தமிழர்கள் எதிர்பார்க்கும் அனைத்து காரியங்களையும் செய்துகொடுப்போம் என உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கும் போலியான ஆவணமொன்றை ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது திஸ்ஸ எம்.பி காண்பித்தார்.
அந்த ஆவணம் தொடர்பில் விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர், திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதனையடுத்தே அவரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
15 minute ago
24 minute ago
31 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
31 minute ago
49 minute ago