Menaka Mookandi / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க, சற்று முன்னர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
அவரை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று போலி ஆவணமொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago