2021 மே 18, செவ்வாய்க்கிழமை

எனக்காக யாரும் பதிலிடவில்லை: கோட்டா

Kanagaraj   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனக்காக யாரும் இதுவரையிலும் பதிலிடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

டெயிலிமிரர் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குமிக்க பிரமுகர்களில் ஒருவரான இவரை பலர் மெச்சினர், இவருக்கு சிலர் பயந்தனர், ஏனையோர் வெறுத்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

அரசியலுக்கு அவர் வரவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே தன்னுடைய இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாக அந்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .