2021 மே 12, புதன்கிழமை

குமார் குணரத்னம் விவகாரம்: 13வரை இடைக்காலத்தடை

Gavitha   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ். செல்வநாயகம்


முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல்குழு உறுப்பினரான குமார் குணரத்னத்தை நாடு கடத்தவோ கைது செய்யவோ வேண்டாம் என உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடைக்கால உத்தரவிட்டது.


குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் அவ்வாறு செய்வது சட்டவிரோத செயல் என உத்தரவிடும்படியும் முன்னிலை சோஷலிச கட்சியினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யப்பட்டது.


குறித்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், குமார் குணரத்னத்தை எதிர்வரும் 13ஆம் திகதிவரை நாடு கடத்த வேண்டாமெனவும்  இது விடயமாக 13ஆம் திகதி நீதிமன்றில் கருத்து முன்வைக்குமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


இந்த மனு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவான், நீதியசரசர்களான சரத் டி அப்ரிவ் மற்றும் அனில் குணரத்னம் ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா விசாவில் 2015ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் குமார் குணரத்னத்தை கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .