Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
--முருகவேல் சண்முகன்
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் காணொளியில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மக்களோடு மக்களாக செயற்படுவதில்லை, தமது குடும்பங்களை இந்தியாவில் வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தில் (பேஸ்புக்கில்) வெளியாகியூள்ளது. இதுதொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்தக்காணொளியின் உண்மைத்தன்மை பற்றி பெரியதொரு சந்தேகமிருப்பதாகவும், அது அவருடன் நடாத்தப்பட்ட நேர்காணலா அல்லது வேறு ஏதாவது கேள்வியை கேட்டுவிட்டு ஒரு பதிலை பெற்றார்களா, அந்தக் காணொளி அரைகுறையில் முடிகிறது எனவே இது எப்படி தயாரிக்கப்பட்டது? யாரால் தயாரிக்கப்பட்டது? எப்படி புனையப்பட்டது தொடர்பாக பாரிய சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago