2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

George   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுத கொள்ளை குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவரை, எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை(10) குறித்த சந்தேகநபரை ஆஜர் செய்த சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்களில் ஒருவர் பெண் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் அவருக்கு மேல்நீதிமன்றம் 20 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளதுடன் சிறையிலிருந்து அவர் தப்பிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 10ஆம் திகதி, அநுராதபுரம் - எலயாபத்துவ, யகலேக்கம பிரதேசத்தில் வியாபாரியெருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற  சம்பவத்தின்பேரில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .