2021 மார்ச் 03, புதன்கிழமை

8ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி ஏற்பாடுசெய்துள்ள 8ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 27ஆம் 28ஆம் திகதிகளில் குறித்த கல்லூரியில் நடைபெறவுள்ளதுடன் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளதாக பிரதி துணை வேந்தர் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை(10) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார்.

இந்த மாநாட்டில் சுமார் 360 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்படவுள்ளதுடன் அதில் 196 வாய்மூல தெளிவுபடுத்தல்களும் 110 அறிக்கை தெளிவுப்படுத்தல்களும் உள்ளடங்குகின்றன.

மொத்தமாக 400 மாணவர்கள் பங்குகொள்ளும் இந்த மாநாட்டில் 40 வெளிநாட்டு மாணவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இடம்பெற்ற 7ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் 200 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதில் 30 வெளிநாட்டு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

27ஆம் திகதி காலை மாலை என இரண்டு அமர்வுகள் நடைபெறவுள்ளதுடன் இரண்டாவது நாளான 28ஆம் திகதி வாய்மூல அறிக்கையிடல் அமர்வு நடைபெறவுள்ளது.

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரியில் தற்போது சுமார் 168 வெளிநாட்டு மாணவர்கள் கல்விகற்று வருவதாகவும் இந்த கல்லூரியில் இணைந்து பயிற்சி பெறுவதற்கு தற்போது ஆர்வத்துடன் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .