2021 மார்ச் 03, புதன்கிழமை

தேர்தல் கண்காணிப்பு குழு – பொலிஸ்மா அதிபர் விசேட சந்திப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்துள்ள தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கும் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை (13) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.  

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நேபாளம், மாலைதீவு, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, தென் கொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து விசேட நிபுணர் குழு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .