2021 மார்ச் 04, வியாழக்கிழமை

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 170 பேர் வந்தனர்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற 2015ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக  வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 170 பேர் வருகைதந்துள்ளனர் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அதில், ஐரோப்பிய ஒன்றியத்தைச்சேர்ந்தோர் 80 பேரும், தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பைச்சேர்ந்த 29பேரும், ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பைச்சேர்ந்த மூவரும் பொதுநலவாய அமையத்தைச்சேர்ந்த கண்காணிப்பாளர்கள் 15பேரும் அடங்குகின்றனர் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பெஃப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மேலும் 15 அல்லது 30 பேர் வருகைதரவிருக்கின்றனர் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .