Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு விஜயம் செய்த அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளில் சீனா நாட்டு சுற்றுலாப் பயணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். எனினும், இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏழு மாதங்களில் 46 சீனர்கள், இலங்கையில் விபத்துக்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இவற்றுள் இருவரின் மரணத்துக்கு நீரில் முழ்கியமையே காரணம் என்று இலங்கைக்கான சீனா தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், 30க்கும் மேற்பட்டோர் திருட்டு சம்பவங்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், ஒரு வன்புணர்வு சம்பவம், பாம்புக் கடிக்கு உள்ளான ஒரு சம்பவம், ஓடும் ரயிலில் இருந்து விழுந்த சம்பவங்கள் இரண்டு மற்றும் சீனா சுற்றுலாப் பயணிகள் மூவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டமை என சீனா சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் சீனா தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், சீனா சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவங்களில் போது குறித்த சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago