2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வயோதிபத் தம்பதியினர் கொலை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, வதுகெதர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த வயோதிபத் தம்பதிகளை இனந்தெரியாத நபர்  கூரிய ஆயுதங்களால் தாக்கி  கொலைசெய்துவிட்டு தப்பிசென்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

போபே ஆராச்சிலாஹே செபால என்ற 63 வயதுடைய முதியவரும் இவரது மனைவி விரகொண்ட ஆரச்சிலாஹே மாலனி என்ற 62 வயதானவருமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலைசம்பவம் புதன்கிழமை(19) இரவு 10 மணியளவில் நடைபெற்றுள்ளது என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .