2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இலங்கையுடன் உறுதியான பங்குதாரராக இருப்போம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நல்லிணக்கமும் நீண்ட சமாதானமும் உருவாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்துடன் ஒரு உறுதியான பங்குதாரராக நாம் இருப்போம் என்று ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹமொன்ட் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த வெற்றிக்கொண்டாட்டதின் போது பிரித்தானிய அரசின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற தேர்தல் விதமானது, இலங்கை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் ரணில் விககி;ரமசிங்கவுடனும் புதிய அரசாங்கத்துடனும்  தொடர்ந்து நல்லுறவை பேணுவதை நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .