Gavitha / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 45க்கு வரையறுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஸீம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த அமைச்சுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடமும் எவ்வாறு பகிரப்படவுள்ளன என்பது தொடர்பில் தன்னால் தற்போது கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த 15 அமைச்சுக்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கே கிடைக்குமே தவிர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சு.க.வுக்கு கிடைக்கப்பெறவுள்ள அமைச்சுக்களில், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம், மீன்பிடித்துறை, விளையாட்டுத்துறை போன்றனவும் உள்ளடங்குவதாக அமரவீர மேலும் கூறினார்.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026