2021 மே 06, வியாழக்கிழமை

ரூ.2.1மில்லியன் அலைபேசிக் கட்டணம்: பொறியியலாளர் பதவி நீக்கம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார கம்பனியின் பொறியியலாளரான இலங்கையர் ஒருவர் இலங்கைக்கு வந்து மீண்டும் அவுஸ்ரேலியா திரும்பும் தனது பயண காலத்தில் உத்தியோக பூர்வ அலைபேசியை பயன்படுத்தி 23,500 நியூஸிலாந்து டொலர் செலவை (இலங்கை பெறுமதி 2 ,110,728)  தனது கம்பனிக்கு ஏற்படுத்தியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவரை மைற்றி றிவர் மின் கம்பனி பதவிநீக்கம்  செய்தது சரியானதாயினும் அவரை விசாரித்த முறையினால் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக கம்பனி அவருக்கு 6,000 டொலர் நட்ட ஈடு வழங்க வேண்டுமென ஊழியர் உறவுகள் அதிகாரசபை பணித்துள்ளது.

இவர், குறித்த கம்பனியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் சேர்ந்துள்ளார்.

இவர், இலங்கைக்கு தனது குடும்பத்துடன் செல்லும் போது தனது உத்தியோக பூர்வ அலைபேசியையும் கொண்டு சென்றுள்ளார் . சில மின்னஞ்சல்களை அனுப்பவும் ஏழு சர்வதேச றோமிங் அழைப்புக்களை எடுக்கவும் தான் இவர் இந்த அலைபேசியை பயன்படுத்தியுள்ளார்.

இது கூடுதலான சர்வதேச றோமிங் கட்டணத்தில் வந்ததுள்ளது என கம்பனி அதிகாரி ஒருவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .