2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சோற்றுப் பார்சல் விலை 10 ரூபாயினால் கூடும்

Gavitha   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசியின் விலை மிகவேகமாக அதிகரித்துச் செல்வதனால், சோற்றுப் பார்சலின் விலையை இன்று திங்கட்கிழமை முதல், 10 ரூபாயினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.   சோற்றுப் பார்சலின் விலையை 10 ரூபாயினால் அதிகரித்தால், நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவார்கள் என்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறும், அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--