2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஹெரோயின் விற்ற 20,481 பேர் கைது

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 10 மாதங்களில் பிரதான நபர்கள் 13பேர் உட்பட 20,468 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கு மேலதிகமாக வெளிநாடுகளிலிருந்து ஹெரோயின் அனுப்பும் வர்த்தகர்கள் அறுவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த அறுவருக்கு எதிராகவும் நமது நாட்டு நீதிமன்றத்தினால் ஆறு சிவப்பு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் 311 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாவும் கடந்த மூன்று மாதங்களில் 50-60 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹெரோயின் கிலோகிராம் தற்போது ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவுக்கு மேல் விலையேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் ஹெரோயின் விற்பனை செய்யும் பிரதான குழுக்கள் நான்கில் மூன்று குழுக்களின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .