2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

21ஆம் திகதி கொழும்பில் கண்காணிப்புக் கமெராக்கள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு உதவும் வகையில் இவ்வாறு பொருத்தப்படும் கமெராக்கள் கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அவசர நிலைமைகளை கண்காணிக்கும். அத்துடன், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்கும உதவும்.  

எவ்வாறு கண்காணிப்புக் கமெராக்களை உபயோகப்படுத்துவது என்பது தொடர்பில் கற்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட்ட குழுவொன்று சிங்கப்பூருக்கு சென்றிருந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கமெராக்களை இயக்கும் நடவடிக்கையை  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துவைக்கவுள்ளார்.


  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Sunday, 19 December 2010 03:35 PM

    கணணி கண்ணும் , மனித கண்ணும் இரண்டும் சேர்ந்து கண்காணிக்க .... நல்ல ஏற்பாடு. முறையாக கண்கானித்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--