2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

முன்னாள் போராளிகளின் சுயதொழில் திட்டத்துக்கு ரூ.25 மில்லியன் வங்கிக்கடன்

Menaka Mookandi   / 2011 மார்ச் 05 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் சுயதொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை ஊக்குவிக்க 25 மில்லியன் ரூபா வரையான வங்கிக் கடன் வழங்கவுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமூகத்தோடு ஒன்றிணைக்கப்பட்ட 5,600 முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளுக்கு மேசன், தச்சு, அழகுக்கலை, முன்பள்ளி மற்றும் சிகையலங்காரம் ஆகிய துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.  

குறித்த பிரதேசங்களிலுள்ள இராணுவ உத்தியோகஸ்தர்கள் இதனை ஒருங்கிணைக்கவுள்ளதுடன் இலங்கை வங்கி கடன் வழங்க இணங்கியுள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டப்ளியூ.எம்.கருணாரத்ன தெரிவித்தார்.

இந்த வங்கிக் கடன் திட்டத்துக்கு முன்னாள் போராளிகள் 2,500 பேர் இதுவரையில் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்படும் அனைவரும் கடனுக்கான விண்ணப்பிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

அவ்வாறு விண்ணப்பித்தால் வழங்கப்படும். 25 மில்லியன் ரூபா கடன்தொகை மேலும் அதிகரிக்கப்படலாம் என கருணாரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--