2020 நவம்பர் 25, புதன்கிழமை

இரண்டு நாட்களில் இலங்கை மீனவர்கள் 26 பேர் கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு நாட்களில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில்  இலங்கை மீனவர்கள் 26 பேர் இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஆந்திர பிரதேசத்திலுள்ள கிருஸ்ணப்பட்டின கடல்பரப்பிலும், புதுச்சேரிக் கடல்பரப்பிலும் டிசெம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இந்திய கடலோர காவற்படையினரால் இடைமறித்து கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, இவர்கள் பயணித்த 5 படகுகளையும் இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இத்துடன் கடந்த 10 நாட்களில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தார்கள் என்ற குற்றத்துக்காக இலங்கை மீனவர்கள் 82 பேர் இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தமிழ் நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடலோர காவற்படையினரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .