Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்)
பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜயவர்தனவை கட்டாய லீவில் அனுப்பியதை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் பணித்ததை செயற்படுத்தாமல் விட்டமை தொடர்பாக அவரது உரிமை மனுவை செப்டெம்பர் 29 இல் ஆராயவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்று மே 25 இல் வழங்கிய பணிப்புரையை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என கௌரிசங்கரி தவராசாவின் நெறிப்படுத்தலில் சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் கூறினார்.
நீதிமன்றத்தின் கட்டளையை பொலிஸ்மா அதிபர் நிறைவேற்றி விட்டாரா என்பது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி ஜுன் மாதம் 23 இல் பொலிஸ்மா அதிபருக்கு கட்டளையிட்டது.
இருந்தும் இதுவரை பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றத்தின் கட்டளைப்படி ஜே.ஆர்.ஜயவர்த்தனவை கட்டாய லீவில் அனுப்பியதை நிறுத்தி வைக்கவில்லை.
35 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
49 minute ago