2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தர்ஷிகாவின் மரணம் குறித்து 29ஆம் திகதி விசாரணை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாதுவான சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை கைதடியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இச்சடலத்தை புதைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கழுத்து இறுகியமையாலேயே உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்குத் தெரிவித்ததாக உயிரிழந்த மருத்துவ மாதுவின் சகோதரி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--