Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 நவம்பர் 21 , மு.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
ஈரான் மீது எந்தவொரு இராணுவத் தாக்குதலாவது இடம்பெறுமேயானால் அது மூன்றாம் உலக யுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம் எனவும், இதனால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
கடுவளையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்படி எச்சரிக்கையினை அமைச்சர் விடுத்துள்ளார். அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
'ஈரான் மீது போர் தொடுத்தால் நிச்சயமாக ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தலையிடும். இந்த அபாயகரமான சூழலினால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படலாம். அப்படியான எந்த நெருக்குதல்களையும் சந்திப்பதற்கு இலங்கை தயாராகவே இருக்கிறது. அது உணவு பற்றாக்குறையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கும் தயாராகவே நாம் இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
'சர்வதேசம் உணவுப் பற்றாக்குறை பற்றி அதிகமாக சிந்திக்கிறது. இந்நிலையில் எமது அரசும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறை பற்றி இப்பொழுதே சிந்தித்து செயற்படத் தொடங்கிவிட்டது' என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
16 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago
kaandee Monday, 21 November 2011 05:10 PM
இவருக்கு பயந்து தான் அமெரிக்கா ஈரான் மேல போர் தொடுக்காம இருக்கு ............
Reply : 0 0
aj Monday, 21 November 2011 05:50 PM
SEMMA COMEDY WITH SL POLITICIANS ... lol
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago