2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

முன்னேஸ்வரம் காளி கோவில் மிருகபலிக்கு எதிரான வழக்கு ; பிரதிவாதிகளின் ஆட்சேபத்துக்கு ஜனவரி 30 வரை அவ

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில்  மிருகபலி வேள்வியை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பிரதிவாதிகள் ஆட்சேப மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஜனவரி 30 ஆம் திகதிவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

நீதிபதி டபிள்யூ.எல். ரஞ்சித் சில்வா, முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தது.

ஸ்ரீ போதிராஜ மன்றம், ஜாதிக சங்க சம்மேளனம், தர்மவிஜய மன்றத்தின் தலைவர் ஒல்கொட் குணசேகர, வண பண்டிருப்புவே வினீதா தேரர், மிருக நலன்புர நம்பிக்கை நிதிய தலைவர் ஐராங்கனி டி சில்வா,  அதன் பொருளாளர் விசாகா திலகரட்ன, இலங்கை மிருக பாதுகாப்புச் சங்கத்தின் உபதலைவர் லோரின் மார்கரெட் பார்தோலோமஸ், இலங்கை மிருக பாதுகாப்பு சங்கததின் செயலளார் ஷிராமினி தேசிறி ரட்னாயக்க, 'சத்வ மித்ர' தலைவர் சாகரிகா ராஜகருணாநாயக்க மற்றும் மேலும் ஐவர் இம்மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இக்கோவிலில் மிருக பலி கொடுப்பதற்கு வருடாந்த அல்லது தற்காலிக அனுமதிப்பத்திரமோ அல்லது வேறு வகையான அனுமதியோ வழங்கக்கூடாது என சிலாபம் நகர சபைக்கும் அதன் தலைவருக்கும் உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

பொலிஸ் மா அதிபர், புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர், சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிலாபம் பொலிஸ் பொறுப்பதிகாரி, சிலாபம் நகர சபை, அதன் தலைவர், ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவில் தர்மகர்த்தாக்கள் எம்.கனகரட்னம், காளிமுத்து சிவபாக்கிய சுந்தரம், மஹேந்திர சாமி, அகில இலங்கை இந்து காங்கிரஸ் தலைவர், சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் சி.ஆர்.டி சில்வா, சுரேன் டி சில்வா, ஆர்.ஜே.டி சில்வா, டுலான் வீரவர்தன ஆகியோர் ஆஜராகினர்.

ஆலயத்தின் தர்மகர்த்தா சிவபாக்கிய சுந்தரம் சார்பில் மொஹான் பாலேந்திராவின் நெறிப்படுத்தலில் எஸ்.சிவராசா, ஏ.ஆர்.சுரேந்திரன், வி.புவிதரன்  ஆகியோரும் தர்மகர்த்தா மஹேந்திர சாமியின் சார்பில் ஸ்ரீநாத் பெரேரா, நெவில் டி சில்வா, என். காண்டீபன் ஆகியோர் ஆஜராகினர். அகில இலங்கை இந்து  காங்கிரஸ் சார்பில் என். நீலகண்டன் ஆஜரானார்.

ஏனைய பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் பிம்பா திலகவர்தன, சிரேஷ்ட அரச சட்டத்தரணி அனூஷா சமரநாயக்க ஆகியோர் ஆஜராகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .