2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

4 மாணவிகள் துஷ்பிரயோகம்; வைத்தியர் கைது

Editorial   / 2020 ஜனவரி 07 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை  மாணவிகள் நான்கு பேரை, பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அம்பாறை, உகன சேனரத்னபுர கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்பதற்கு வைத்திய பரிசோதனை அவசியம் என தெரிவித்து குறித்த மாணவிகள், வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளின் பின்னர் தாம் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக குறித்த மாணவிகள், பொலிஸாருக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

14,17 மற்றும் 18 வயதுடைய மாணவிகளே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளுக்காக மாணவிகள், அம்பாறை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட வைத்தியர், அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (07) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .