2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வன்னியில் 4 வைத்தியசாலைகள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தகாலத்தின்போது வடபகுதியில் சேதமடைந்த நான்கு வைத்தியசாலைகளை புனர்நிர்மாணம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையையும் முழங்காவில் ஆதார வைத்தியசாலையையும் கிளிநொச்சியில் பூநகரி பிரதேச வைத்தியசாலையையும் பளை வைத்தியசாலையையும் புனரமைப்புச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கமைய இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்கென 23 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. (News.lk)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X