2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சனல் 4 வீடியோ குறித்து இலங்கைக்கு பிரிட்டன் அழுத்தம்

Super User   / 2011 ஜூன் 15 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பிரிட்டனி;ன் வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இராணுவத்தினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் எனத் தெரிவித்து, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியொன்றின் பின்னர் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்த வீடியோவை நிராகரித்துள்ளது. இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோ போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

 

 

சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்ட இந்த யுத்தத்தில் இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் புலிகள் ஆகிய இரு தரப்பு மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

'இலங்கையின் கொலைக்களம்' என தலைப்பிடப்பட்ட, ஒரு மணித்தியாலம்  கொண்ட மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதாக தோன்றும் நிர்வாண பெண்களின் சடலங்கள் காணப்படுகின்றன.

சனல் 4 அலைவரிசை 2 வருட காலமாக வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளைத் திரட்டியதன் மூலம் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி வீடியோக்களில் ஒன்றில், ஒருபெண் உட்பட குறைந்தபட்சம் 3 கைதிகள், கைகள் கட்டப்பட்ட நிலையில், நெருங்கிய தூரத்தில் வைத்து சுடப்படும் காட்சி உள்ளது.

அதில், அவர்களை எப்படி கொல்வது என்பதை சிப்பாய் ஒருவர் ஏனையோருக்கு அறிவுறுத்துகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளானால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களையும் சனல் 4 வீடியா காண்பித்துள்ளது.

பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை சாட்சிகள் விபரிப்பதும் அந்த படத்தில் உள்ளது.  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட், மேற்படி காட்சிகளைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்தாக தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .