2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இலங்கைக்கு எதிராக புதிய ஆதாரங்களுடன் இரு வீடியோக்களை தயாரிக்கிறது செனல் - 4

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அடங்கிய புதிய ஆதாரங்கள் அடங்கிய இரு வீடியோ தொகுப்புக்களை இங்கிலாந்தின் செனல் - 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செனல் - 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்ற வீடியோக்களால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. இந்நிலையில் மேற்படி தொலைக்காட்சி மேலும் இரு வீடியோக்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற முன்னாள் போராளிகள் 8 பேர் வழங்கிய இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை வைத்தே மேற்படி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் மேற்படி இரு வீடியோக்களும் வெளியிடப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய வீடியோத் தொகுப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பற்றிய தகவல்களும் இடம்பெறவுள்ளதாகவும் இந்த வீடியோக்களினால் இலங்கை அரசாங்கத்துக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படக்கூடும் என்றும் அவ்வூடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

  Comments - 0

 • Kumar Saturday, 05 January 2013 01:55 PM

  மழை விட்டாலும் தூவானம் விடலை!

  Reply : 0       0

  AJ Saturday, 05 January 2013 02:54 PM

  சர்வதேச ஊடகம்? எனக்கு தெரிந்து சர்வதேச ஊடகம் ஏதும் இப்படியான செய்திகள் வெளிவிடவில்லை. எது எப்படி இருந்தாலும் மனிதத்தை நேசிக்கும் சிங்கள மக்களால் மற்றும் ராணுவம் அனுப்பிய மற்றும் அங்கு வாழ்ந்த மக்கள் மற்றும் போராளிகள் அனுப்பிய காணொளி மற்றும் படங்கள் ஏராளம் சேனல் 4 மற்றும் மனித உரிமை மீறல்கள் அமைப்புகளிடம் இருப்பது மட்டும் உண்மை.
  நீங்க இங்கு ஏட்டிக்கு போட்டிய வழமை போல மறப்பும் அதே நேரம் காணொளி போரையும் இப்போது தொடங்குங்க

  Reply : 0       0

  xlntgson Sunday, 06 January 2013 09:57 AM

  Why this murder instinct?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .