2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகத்திட்டத்திலிருந்து பாவனைக்குதவாத நீர்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கண்டி ஜயஸிரிகம நீர் விநியோகத் திட்டத்திலிருந்து பாவனைக்கு உதவாத சேறு கலந்த நீரே கிடைப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உலக வங்கியின் அனுசரணையுடன் மத்திய மாகாணசபை இந்த நீர் விநியோகத் திட்டத்தை நிர்மாணித்துள்ளது.   40 இலட்சம் ரூபா செலவில் சுமார் 200 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த நீர் விநியோகத்திட்டத்திலிருந்து பெறப்படும் நீர் பாவனைக்கு கூட உதவாது என மக்கள் குறிப்பிட்டனர்.

சேறு கலந்து வரும் இந்த நீரை பேராதனையிலுள்ள நீர் பரிசோதனை நிலையத்தில் பரிசோதித்தபோது நீரில் கிருமிகள் அதிகம் காணப்படுவதுடன் பாவனைக்கு உகந்தது அல்ல என அறிவுறுத்தப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--