2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பொலிஸில் இணைவதற்கு 4,000 தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                     alt             (நபீலா ஹுசைன்)

நான்காயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் இலங்கை பொலிஸில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 340 பேர் இலங்கை பொலிஸில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

தற்போது மேற்படி 340 தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி நிறைவடைந்தவுடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவுள்ளனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேர்க்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.

இதேவேளை, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் எழுதுவது தொடர்பில் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--