Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்திலிருந்து பலர் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்வதற்காக வெளியேறி வருவதால், இந்த வருடம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் வாக்களர்களின் எண்ணிக்கை மேலும் 41,750ஆல் குறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் 816,005ஆக காணப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 485,791ஆக குறைவடைந்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ள மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வசித்து வருகின்றமை, அவர்களில் பலர் ஏனைய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளமை போன்ற காரணங்களால் அவர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படுவார்களென தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவிலிருந்து 41,750 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதால், யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடைவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
'வாக்காளர்கள் பதிவு செய்யும் காலப்பகுதியில் அவர்கள் தமது வீடுகளில் இருக்கவில்லை. சிலர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி ஏனைய மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். எவ்வாறாயினும் இது சிக்கலுக்குரிய விடயமாகும்' என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவில் 16,990 பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
'வாக்காளர் இடாப்பிலிருந்து எவராவது விடுபட்டிருந்தால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். இவ்வாறான முறைப்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என அவர் கூறினார். (Kelum Bandara)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021
14 Apr 2021