Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
“எமது வருடமும் - எமது குரலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்தமன்றத்தின் கீழியங்கும் பிரஜாசக்தி நிலையங்களில் இன்று முதல் இளைஞர்தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று பிரஜாசக்தி முகாமையாளர் பி.நகுலேந்திரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்தமன்றத்தின் கீழியங்கும் பிரஜாசக்தி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்தின நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் இவ்வருடத்தின் தொனிப்பொருளான “எமது வருடமும் - எமது குரலும்” என்பதற்கு அமைவாக இளைஞர்தின நிகழ்வுகள் நாடெங்கிலுமுள்ள 44 பிரஜாசக்தி நிலையங்களிலும் இன்று 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் முழுவதும்
பின்வரும் கருப்பொருளுக்கு அமைவாக இடம்பெறவுள்ளது.
தற்கால இளைஞர் யுவதிகள், சமுகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஊடகத்துறையினரின் பங்களிப்பு , இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையில் புரிந்துணர்வை விருத்தி செய்தல் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல் , இளைஞர்களுக்கிடையிலான விவாத போட்டிகள் ஆகியன மேற்குறிப்பிட்ட தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள தொனிப்பொருளுக்கமைவாக சித்திரப் போட்டிகள், கண்காட்சிகள் மற்றும் பிரஜாசக்தி நிலையங்களுக்கு ஊடாக அப்பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இனிவரும் காலங்களில் “எமது வருடமும் - எமது குரலும்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக சகல ஊடகத்துறையினருடனும் இணைந்து பிரஜாசக்தி நிலையங்கள் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago