2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வாரத்தில் 5 நாள் வேலைக்கு எதிர்ப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

அரசாங்கத்துறை ஊழியர்களுடன் இணைந்து வாரத்திற்கு ஐந்து நாள் என்ற வேலைத்திட்டத்தை எதிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தனியார்த்துறை தொழிற்சங்கங்கள் இன்று கூறின.

அனைத்துக் கம்பனி ஊழியர் சங்கம், சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் என்பன, தாம் வாரத்துக்கு ஐந்து நாள் வேலைத்திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறின.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒருவர் ஒரு நாளைக்கு வேலை செய்யும் நேரம் அதிகரிக்கும். ஆனால் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் செயலாளர் அன்ரன் மார்க்கஸ் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களும் தேசிய தொழில் கவுன்சிலும் இந்தத் திட்டத்தை அமுல்ப்பத்தும் தெரிவை வேலை கொள்வோரும் ஊழியர்களும் சேர்ந்தே மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளன.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெப்ரவரி மாதம் நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளதாக அனைத்துக் கம்பனி ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதற்காக ஏனைய தொழிற்சங்கங்களின் ஆதரவையும் திரட்டி வருவதாகவும் மேற்படி வேலைத்திட்டம் உலகில் எங்கும் நடக்காததொன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த நடவடிக்கையானர் அரசாங்கமும் வேலைகொள்வோரும் இணைந்து தொழிலாளர்களை சுரண்டுவதற்கு மேற்கொண்ட திட்டமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0

  • xlntgson Wednesday, 19 January 2011 09:10 PM

    எதையும் எதிர்ப்பது என்று முடிவு போலும்!
    நான் நினைத்தேன் வரவேற்பார்கள் என்று!
    இப்படி ஆனால் அடுத்தடுத்து வரும் சனி ஞாயிற்றுக் கிழைமைகளோடு சேர்த்து திங்கள்கிழமையும் விடுப்பு போட இயலாது என்றோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--